Tuesday, March 30, 2010

பயங்கரவாதத்தை எதிர்க்க தாம் ரஸ்யாவுக்கு உதவ தயார் : இலங்கை

ரஸ்யாவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டிற்கு உதவுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், ரஸ்ய ஜனாதிபதி திமிட்ரி மெட்வவேட்வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தில் நேற்று ரஸ்யாவில் நேற்று இரண்டு பெண் குண்டுதாரிகள் நடாத்திய தற்கொலை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது கவலையை வெளியிட்டுள்ளார்.

30 வருடங்களாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட என்ற நாடு என்ற வகையில், இலங்கை இந்த தாக்குதலின் பாதிப்பை உணர்வதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பயங்கரவாதத்தை தோற்கடித்த நாடு என்ற வகையில் ரஸ்யாவுக்கு உதவ தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.