கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 ஈழத்தமிழ் அகதிகளையும் விடுதலை செய்வதற்கு கனடா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த 3 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 25 அகதிகளையும் விடுதலை செய்வதற்கு கனடா இணக்கம் தெரிவித்துள்ளது.
பல நிபந்தனைகளின் அடிப்படையில் தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு கனடா சம்மதித்துள்ளதாக தமிழ் மக்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் டக்ளஸ் கனன் தெரிவித்துள்ளார்.
கப்பல் மூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் நாள் வன்கூவர் கடற்பகுதியை வந்தடைந்த அவர்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் அடிப்டையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கப்பலில் வந்தவர்களில் ஏனையவர்கள் இதற்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த அகதிகளை விடுதலைப்புலிகள் என சித்தரிக்க சிறீலங்கா அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளது, சிறீலங்கா அரசின் பொய்பிரச்சாரங்களுக்கு கிடைத்த மற்றுமொரு பின்னடைவாகும்
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.