Friday, January 22, 2010

மட்டக்களப்பில் பொன்சேகா ஆதரவாளர் மீது பிள்ளையான் குழு தாக்குதல்



மட்டக்களப்பில் நடைபெற்ற ஜெனரல் சரத் பொன்சோகவுக்கு ஆதரவான கூட்டத்திற்கு சென்ற மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது பிள்ளையான் குழு உறுப்பினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. கிருஷ்னபிள்ளை மீது அரசுடன் இணைந்து செயல்படும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் நடைபெற்ற பொன்சேகாவுக்கு ஆதரவான கூட்த்திற்கு சென்ற மக்களுக்கு பயண ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்காகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் தலையில் காயமடைந்த கிருஷ்ணபிள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வெள்ளைவானில் வந்தவர்களால் தான் தாக்தலுக்கு உள்ளாகியதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிள்ளையான் குழு உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டாம் என எச்சரித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.