Wednesday, December 30, 2009

யாழுக்கு விஜயம் செய்வதாயின் ஊடகவியலாளர்கள் அனுமதி பெறவேண்டும்

ஏ-9 சாலையூடாக ஊடகவியலாளர்கள் யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் இப்போதும் உள்ளன எனக் கூறியுள்ளார் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இயக்குநர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல. இன்று புதன்கிழமை நடந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போர்க்காலத்திலும், போர் முடிந்த பின்னரும் அரசாங்கத்தால் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நடைமுறைகள் இப்போதும் தொடர்ந்து அமுலில் இருந்துகொண்டுதான் உள்ளன என்றார் அவர் மேலும்.

ஆகவே யாழ் குடாநாட்டுக்கு ஏ-9 சாலையூடாக யாரேனும் ஊடகவியலாளர்கள் செல்ல விரும்பின் அவர்கள் கட்டாயம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்று சொன்னார். ஆனால் இந்த நடைமுறை பொதுமக்களுக்கு பொருந்தாது என்றும் அவர்கள் நாட்டின் எந்த மூலையிலிருந்தும் வந்து செல்லலாம் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.