பிரித்தானியா நோத்காம்டன், டஸ்டன் பகுதில் உள்ள காஸ் & கரி (வாணிப நிலையம்) ஒன்றில் பணத்தைப் பறிக்க முற்பட்ட 3 இலங்கையரை போலிசார் M1 அதிவேகச் சாலையில் வைத்து கைது செய்துள்ளனர். லாட்ஜ் பாம் தொழில் மையத்தில் அமைந்துள்ள பல்பொருள் மொத்த வாணிப நிலையம் ஒன்றிற்குள் புகுந்த 3 இலங்கையர்கள், அங்கு வேலை செய்யும் மனேஜரை பயமுறுத்தி, கஜானாவைத் திறக்க முற்பட்டுள்ளனர். இருப்பினும் அக் கஜானா நேரக்கட்டுப்பாட்டில் இயங்குவதால் அவர்களால் அதை வேகமாகத் திறக்கமுடியவில்லை.கைதுசெய்யப்பட்ட 3 இலங்கையரிடமும் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் மொபைல் போன் தொலைபேசியை வைத்து வேவுபார்க்கும் அதி நவீன சாதனங்களையும் இவர்கள் பயன்படுத்தியுள்ளைமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.