Saturday, December 12, 2009

இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வானூர்தி தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்து வைப்பு!?


வடகொரியாவில் இருந்து கனரக ஆயுதங்களை சிறீலங்காவுக்கு எடுத்த சென்ற விமானம் ஒன்றை தாய்லாந்து அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். அதில் பயணம் செய்த சிப்பந்திகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆயுதங்களில் பெருமளவான ஏவுகணைகளும், கிறனைட் லோஞ்சர்களும் இருப்பதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆர்.பி.ஜி உந்துகணைகள், உந்துகணை செலுத்திகள், விமான எதிர்ப்பு சாம் ஏவுகணைகள், வெடிபொருட்கள் பெருமளவில் விமானத்தில் உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

விமான சிப்பந்திகளில் ஐந்து வெளிநாட்டவர்கள் அடங்கியுள்ளதுடன், விமானத்தில் 35 தொன் கனரக ஆயுதங்களும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனம்தெரியாத இந்த விமானம் தாய்லாந்தின் டொன் மியன்ங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. வடகொரியாவில் இருந்து சிறீலங்கா நோக்கி பயணித்து கொண்டிருந்த ரஸ்யா தயாரிப்பான ஐஎல்-76 இராணுவ சரக்கு விமானம் தயாலாந்தில் எரிபொருள் நிரப்புவதற்காக அனுமதி கோரியிருந்தது.

அதனை தொடர்ந்தே தாய்லாந்து அதிகாரிகள் விமானத்தை கைப்பற்றியுள்ளனர். தற்போது 100 மேற்பட்ட தாய்லாந்து காவல்துறையினர் விமானத்தை சோதனை செய்து வருகின்றனர். விமான சிப்பந்திகளில் ஒரு பெலரேசியன், 4 கசாகஸ்தான் நாட்டு சிப்பந்திகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமானம் சிறீலங்காவுக்கு சென்றதை தாய்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே விமானம் இன்று அதிகாலை தாய்லாந்தில் எரிபொருளை நிரப்பிய பின்னர் வடகொரியா சென்று ஆயுதங்களை ஏற்றிய பின்னர் மீண்டும் எரிபொருள் நிரப்புவதற்கு மாலை 4.00 மணிக்கு அனுமதி கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அரசின் தகவல்களை தொடர்ந்தே தாய்லாந்து காவல்துறையினர் விமானத்தை கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே விமானத்தில் இருந்த ஆயுதங்களை தாய்லாந்து அரசு இராணுவ வண்டிகள் மூலம் தரையிறக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது




No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.