Wednesday, November 04, 2009

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரிந்த அரச ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்


இல்லையேல் இப்போது வழங்கப்படும் சம்பளம் நிறுத்தப்படும்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உட்பட மீளக்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேசங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் உடனடியாகத் தமது கடமை களுக்குச் சமுகமளிக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அறி வுறுத்தியுள்ளார். இடம்பெயர்தோர் நலன்புரிக் கிராமங்க ளில் தங்கவைக்கப்பட்டிருப்போர் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் வடமாகாணத்தைச் சேர்ந்தோரை அவர்களது இடங்களில் மீளக்குடியமர்த்து வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனால் அந்தப் பொது மக்கள் வசிக்கும் பிரதே சங்களில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட சகல அரச நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தி யோகத்தர்களும் தாம் சேவையாற்ற வேண்டிய அலுவலகங்களுக்கு உடனடியாக கடமைக்குச் சமுகமளிக்குமாறு அறிவுறுத்தும் படி வடமாகாண அமைச்சுக் களின் மேலதிகாரிகளுக்கு ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி நேற்று திருகோணமலையில் வைத்துப் பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை வடமாகாண சபை அலுவலக கட்டடத் தொகுதியில் இடம் பெற்ற வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்து ஆளுநர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். வடமாகாணத்தைச் சேர்ந்த சகல அமைச்சுக்களது செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் மேற்குறிப் பிட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக் கமைய செயற்பட்டு வடபகுதியின் அபிவிருத்திப்பணியை துரிதமாக முன்னெடுத்து வெற்றியடையவைக்க சகல உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப் புணர்வுடன் செயலாற்ற வேண்டியுள்ளதென குறிப்பிட்ட ஆளுநர் அதற்கு வேலைத்திட்டத்திற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளது ஆதரவும் தொடர்ச்சியாகக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் முள்ள சில அரச நிறுவனங்கள் செயற்படாத போதிலும் அப்பிரதேசங்களில் கடமையாற்றிவந்த அரச ஊழியர்கள் சகலருக்கும் அரசு இதுவரை அவர்களது சம்பளத்தை வழங்கி வருகிறதாகவும் குறிப்பிட்ட அப்பிரதேசங்களில் அத்தியாவசியத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுத்தே அரசு அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களை மீளக்குடியமர்த்தி வருகிறது. அப்பொதுமக்களுக்கான தமது சேவைகளை முறைப்படி வழங்க அப் பிரதேசத்தில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் உடனடியாக தத்தமது கடமை நிலையங்களுக்குச் சமுகமளிக்க வேண்டும். அவ்விதம் தமது கடமை நிலையங்களுக்கு சமுகமளிக்கத் தவறுவோர்களுக் கான சம்பளத்தை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் நேற்றைய கூட்டத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.