சிறீலங்கா உரிமைகோரும் தமிழர் தாயகப்பகுதியான மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணெய் படுக்கையில் உள்ளதாக கருதப்படும் எண்ணெயை அகழ்வதற்கு பல நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக சிறீலங்காவின் எரிசக்தி அமைச்சர் பௌசி தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கொரியா மற்றும் யப்பான் ஆகிய நாடுகள் இதில் போட்டி போடுவதாகவும் தெரிவித்துள்ள பௌசி தற்போது ஒரு இந்திய நிறுவனம் மன்னார் வளைகுடாவில் உள்ள முதல் கட்டத்தில் தனது பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தம்மிடம் 8 வெவ்வேறு எண்ணெய் படுக்கை அகழ்வுக்கான கேள்விப்பத்திரங்கள் உள்ளதாகவும் அவற்றுக்கான பொது கேள்விகள் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவற்றின் மூலம் பில்லியன் பீப்பாய் எண்ணெய் பெற்றுக் கொள்ளலாம் என தாம் நம்புவதாகவும் அம்பாந்தோட்டையிலும் இதுமாதிரியான எண்ணைய் படுக்கைகள் இருப்பதை நோர்வெ நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பௌசி கடல் படுக்கை ஆய்வுகளில் மூலம் கிடைக்கபெற்ற தரவுகளை விற்றும் தாம் பெரும் பணம் சம்பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதில் 3 இவ்வாறு விற்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் 4 பில்லியன் டொலரை தாம் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த உடன் அதன் நிலப்பரப்புகள் வளங்களை சூறையாடும் சிறீலங்கா அதன் கடலையும் சூறையாடுவதும் பிற் அன்னிய நாடுகளுக்கு தாரை வார்த்த கொடுப்பதும் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைக்கு வழி கோலும் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.