Tuesday, April 01, 2008

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை பொறுப்பில் அனுராதபுரம்

[செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2008,] சிறிலங்காவின் நிர்வாகத்தில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தின் பாதுகாப்புப் பொறுப்பை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஏற்றுள்ளனர். கெப்பிட்டிக்கொல்லாவ, துட்டுவேவெ மற்றும் நிகவேவ ஆகிய தாக்குதல்கள் நடைபெற்று வரும் பகுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளால் தாக்கப்படும் பகுதிகள் வரையறுக்கப்பட்டு அப்பகுதியில் 9 அதிரடிப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் நிர்வாகி எம்.எல்.சரத்சந்திர தெரிவித்துள்ளார். அனுராதபுரத்திலிருந்து 57 கிலோ மீற்றர் நீள வீதியில் கெப்பிட்டிக்கொல்லாவவின் தூர பிரதேச பிரிவுக்கு பாதுகாப்பாகவும் கெப்பிட்டிக்கொல்லாவவிலிருந்து துட்டுவேவ மற்று நிகவேவ பகுதிகளுக்குச் செல்லும் 22 கிலோ மீற்றர் வீதியிலும் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த வீதிகள் அனைத்தும் அதி உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்படுவதாகவும் சரத் சந்திர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.