[திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2008]
வன்னிக் களமுனையில் நேற்றைய நாள் இடம்பெற்ற மோதல்களில் 10 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னார் பாலாமோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் படையினர் இரு முனைகளில் முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இம் மோதல்களின் போது 9 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேநேரம் வவுனியாப் பகுதியிலும் நேற்று படையினர் முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.
இம் மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.