Sunday, March 30, 2008
வன்னிக் களமுனையில் வைரஸ் தாக்கம்: மருத்துவமனையில் 500 படையினர்
[ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2008,]
வன்னியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இராணுவத்தினர் வைரஸ் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களமுனைகளில் உள்ள பெருமளவிலான படையினர் சிக்குன்குனியா, டெங்கு போன்ற வைரஸ் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய 500 இராணுவத்தினர் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
இது தொடாபில் கருத்து தெரிவித்த மாகாண மருத்துவப் பணிப்பாளர் மருத்துவர் டபிள்யூ. அத்தபத்து தெரிவித்துள்ளதாவது:
இந்த நெருக்கடி ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்திருந்தது. நோய்த் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் அனுராதபுரம், பதவியா, சம்பத்நுவெர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் நோய்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நுளம்புகளின் தாக்கங்களை தவிர்ப்பதற்கு கொசு வலைகளும் விநியோகிக்கப்படுன்றன.
களமுனைகளில் கைவிடப்படும் எறிகணைகளின் கொள்கலன்களில் அதிகளவான நுளம்புகள் பெருக்கம் அடைகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.