Thursday, December 27, 2007
வன்னி முன்னரங்கநிலைகளில் மோதல் : 5 படையினர் பலி: 11பேர் காயம்
[வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2007]
புதன்கிழமை காலை 7.20 மணியளவில் பாலைக்குழி மன்னார் பகுதியில் விடுதலைப்புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டும் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
சிறீலங்கா படையினர் கடுமையான ஆட்டிலெறி, மோட்டார் சூட்டாதரவுடன் காலை 7.20 மணியளவில் பாலைக்குழி மன்னார் பகுதியில் விடுதலைப்புலிகளின் பகுதிநோக்கி முன்னகரமுற்பட்டதாகவும். இச்சமர் சுமார் காலை 11.20 மணிவரை இடம்பெற்றதாகவும் விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்பையடுத்து படையினர் இழப்புக்களுடன் பழையநிலைகளுக்கு ஓட்டமெடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இம்மோதல்களில் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளதாகவும் படையினர் தரப்பில் 5 படையினர் கொல்லப்பட்டும் 11 பேர் காயமடைந்தள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதேபோன்று முகமாலை முன்னரங்க நிலைகளில் காலை 11 மணியளவில் இடம்பெற்ற மோதல்களும் மணலாறு மண்கிண்டி மலைப்பகுதியில் காலை 10.40ற்கு இடம்பெற்ற மோதல்களும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.