[செவ்வாய்க்கிழமை, 11 டிசெம்பர் 2007]
மன்னார் மாந்தையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
மன்னார் மாந்தைப் பகுதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் கிழக்குத் திசையில் அடம்பன் நோக்கி முன்நகர்வை மேற்கொண்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் முறியடிப்புத்தாக்குதலை நடத்தினர்.
இதில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர்.
மேலும் பரப்பாங்கண்டல் முன்னரண் பகுதியில் படை முன்னரண் மீது விடுதலைப் புலிகள் இன்று முற்பகல் 10.30 மணிக்கு நடத்திய குறிசூட்டுத் தாக்குதலில் 4 படையினர் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.