தமிழீழ அமைதிப் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலையைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் மீது இன்று முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தின் தொடக்கத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முழக்கங்கள்:
இந்திய அரசே இந்திய அரசே!
எங்கள் வரிப்பணத்தில்
இலங்கைக்கு ஆயுதமா?
எங்கள் காசை வைத்து
எங்கள் மக்களைக் கொல்லாதே!
இந்திய அரசே! இந்திய அரசே!
இந்திய இராணுவம்
இந்தியாவின் காவலாளா?
இலங்கையின் ஏவலாளா?
இலங்கைக்கு வழங்காதே!
ஆயுத உதவி வழங்காதே
இராணுவ பயிற்சி அளிக்காதே!
உளவு பார்த்து சொல்லாதே!
எந்த உதவியும் செய்யாதே!
நிறுத்து நிறுத்து
உடனே நிறுத்து
சிங்கள இனவெறி இராணுவத்துக்கு
வழங்கும் ஆயுத உதவிகளை
உடனே நிறுத்து!
இந்திய அரசே
இந்திய அரசே
இலங்கைக்கு அளிக்கும்
இராணுவ பயிற்சிகளை
உடனே நிறுத்து!
புத்தர் பூமியெங்கும்
இரத்த வாடையடிக்குது
யுத்த குண்டு வீச்சிலே
தமிழர் உயிர் துடிக்குது
மக்கள் சொத்து அழியுது
வீரவணக்கம் வீரவணக்கம்
புலிப்படை தளபதிகளுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்
நாங்கள் தமிழர்கள்
அவர்கள் தமிழர்கள்
ஈழத் தமிழர்
எங்கள் இரத்தம்
ஈழ யுத்தம்
எங்கள் யுத்தம்
குண்டுகளை வீசாதே!
பிஞ்சுகளை கொல்லாதே!
சிங்களவன் நெஞ்சில் ஈரமில்லை
செஞ்சோலைக் குருதி காயவில்லை
தொடர்ந்து குண்டுகள் வீசியே
பிஞ்சுகளைக் கொல்லுகிறான்
அப்பாவிகளைக் கொல்லுகிறான்
அரசியல் தலைவரையும் கொல்லுகிறான்
ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முற்றுகைப் போராட்டத்தின் தொடக்கத்தில் கொளத்தூர் தா.செ. மணி பேசியதாவது:
சிறிலங்காவின் இராணுவ இலக்குகளையும் பொருளாதார இலக்குகளையும் மட்டுமே தாக்குகிற தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சிங்கள இனவெறி அரசு சொல்ல அதனை ஏற்று பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருக்கின்றன.

ஆனால் பல நாடுகளின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்ட அமைதிப் பேச்சில் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக பள்ளிகள், குடியிருப்புக்கள், வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள் மீது குண்டுகளை வீசியும் அப்பாவிப் பொதுமக்களை- செய்தியாளர்களை- நாடாளுமன்ற உறுப்பினர்களை- மாணவர்களை கொன்றொழித்தும் இன்று இறுதியாக அமைதிப் பேச்சுக்கு தலைமையேற்று நடத்தி வந்த அரசியல் பிரிவு தலைவரையே குறி பார்த்து குண்டுவீசியும் கொன்றிருக்கிற சிங்கள அரசே உண்மையான பயங்கரவாதி என்பதைப் புரிந்து கொண்டு சிங்கள அரசுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி உள்ளிட்ட எந்த ஒரு உதவிகளையும் இந்திய அரசு செய்யக்கூடாது என்று நாம் வலியுறுத்துகிறோம்.
திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழ் இனத்துக்கு அரணாக நின்று உலக நாடுகளே ஏற்றுக் கொண்டு பிரகடனப்படுத்தியுள்ள சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விடுதலைப் போராட்ட அமைப்பாக அங்கீகரித்து இந்திய அரசுக்கோ இந்திய இறைமைக்கோ எப்போதும் எதிராக செயற்படாத விடுதலைப் புலிகள் மீது தேவையற்று போடப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.

இந்த கோரிகைகளை முன்வைத்து தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம்.
போரில் இறந்த போராளிகளைக் கூட அனைத்துலக நெறிமுறைகளுக்கு எதிராக நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியும் தொடர்ந்து இனவெறியுடன் தமிழர்களைக் கொன்றுவரும் இலங்கை அரசைக் கண்டித்து தூதரகம் மீது இன்று முற்றுகைப் போராட்டம் நடத்துகிறோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கொளத்தூர் மணி, தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் திருச்சி சௌந்தர்ராஜன், "தமிழ் மண்" பதிப்பகம் இளவழகன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பச்சைமலை, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் அன்பு தென்னரசு, பெரியார் தி.க. துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெருந்திரளான ஊடக நிறுவனங்களும் இந்நிகழ்வை பதிவு செய்தன.
நன்றி:புதினம்
பெருந்திரளான ஊடக நிறுவனங்களும் இந்நிகழ்வை பதிவு செய்தன.
நன்றி:புதினம்
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.