[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007]
போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு எத்தனிக்க வேண்டாம் என, சிறீலங்கா அரசாங்கதை யப்பான் எச்சரித்துள்ளது.
இது குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக, அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு செய்தியொன்றை அனுப்பி வைத்திருக்கும் ஜப்பானிய அரசாங்கம், போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் விலகும் பட்சத்தில், அரசாங்கத்திற்கான நிதியுதவிகளை தாம் நிறுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பதாக சிறீலங்கா அரசாங்கம் தடை செய்வது, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக அமையும் என, அமெரிக்காவும்,
இந்தியாவும் கருத்து வெளியிடப்பட்டிருப்பதாகத் தகவல்களை வெளிவந்துள்ளதாக சிறீலங்கா அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு, அமெரிக்காவும், இந்தியாவும் படைத்துறை - பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.