Wednesday, November 14, 2007

கொழும்பில் வெளிநாட்டவர் கடத்தல்: நாட்டு மக்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை

[புதன்கிழமை, 14 நவம்பர் 2007]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெளிநாட்டவர்கள் பணத்துக்காக கடத்தப்படும் அபாயம் உள்ளதாக தன் நாட்டு மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிக்கை:

வடக்கு - கிழக்கு மற்றும் சிறிலங்காவின் பகுதிகளில் அதிகரித்துள்ள அண்மைய மோதல்களால் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறும் நிலையில் அவுஸ்திரேலிய மக்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை குறித்து பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் சிறிலங்காவின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடைபெறும் நிலைமை உள்ளது.

கடந்த நவம்பர் 2 ஆம் நாள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்காவின் வான்குண்டுத் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். இச்சம்பவத்தினால் சிறிலங்காவின் எந்தப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும்.

மேலும் கொழும்பில் வெளிநாட்டவர்கள் பணத்துக்காக கடத்தப்பட்டு வரும் அபாயம் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.