Monday, October 22, 2007

அநுராதபுர தாக்குதலினால் சிறிலங்காவின் ஆழ்கடல் நடவடிக்கை முடக்கப்பட்டு விட்டது: இக்பால் அத்தாஸ்

[திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2007]

அநுராதபுர தாக்குதலின் மூலம் சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முடக்கியுள்ளனர் என்று சிறிலங்காவின் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" நாளேட்டின் ஊடகவியாலாளரிடம் இக்பால் அத்தாஸ் தெரிவித்து கருத்து:

தமிழீழ விடுதலைப் புலிகளால் "எல்லாளன் நடவடிக்கை" எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அநுராதபுர தாக்குதலில் சிறிலங்கா வான்படையின் 12 முதல் 18 வரையிலான வானூர்திகள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சீனத் தயாரிப்பான சிறிலங்கா வான்படையினர் கே-8 பயிற்சி வானூர்தி மற்றும் கடல்சார் நடவடிக்கைக்கான வேவு வானூர்தி ஆகியனவும் இத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.