Wednesday, October 03, 2007
புலிகளின் எறிகணைத் தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பலி- மூவர் படுகாயம்.!!
[புதன்கிழமை, 3 ஒக்ரொபர் 2007]
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுனியா குருடுவித்தன் குளத்தை அண்மித்த பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புலிகளின் தாக்குதலை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினரும் பதில் தாக்குதல்கள் நடத்தினர்.
வவுனியாவில் கடந்த ஒரு வாரமாக இரு தரப்பிற்கும் இடையே ஒவ்வொரு நாளும் கடும் எறிகணைத் தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வவுனியா முன்னரங்கப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த புலிகள் இயக்க பெண் போராளி ஒருவரின் சடலத்தை இன்று புதன்கிழமை முற்பகல் 11:20 மணியளவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் பொறுப்பேற்று வன்னிக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.