Wednesday, October 03, 2007

தமிழர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை ஏற்படுத்த முடியாது: சிறிலங்கா.!

[புதன்கிழமை, 3 ஒக்ரொபர் 2007]

இலங்கைத் தீவில் தமிழரின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை ஏற்படுத்த முடியாது என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன கூறியுள்ளார்.

வோசிங்கரனில் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது:

நீண்டகால இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு சிறிலங்காவுக்கு அனைத்துலகம் அழுத்தம் கொடுக்க முடியாது. தமிழ் பிரிவினைவாதிகள் வன்முறையை மீளத் தொடக்கியுள்ள போதும் ஜனநாயக நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ள போதும் சிறிலங்கா அரசாங்கமானது பரந்துபட்ட அளவில் அனைத்துத் தரப்பினராலும் ஏற்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அணுகுமுறைக்கு அனைத்துலகம் ஆதரவளிக்க வேண்டும். மேலும் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண முடியாதது குறித்தும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசியல் வழித் தீர்வு என்பது ஜனநாயக ரீதியாக கவனமாக பொறுமையாக அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுக்களை நடாத்தி உருவாக்குவதாகும்.

சிறிலங்கா அரசாங்கமானது இராணுவ வழித்தீர்வை முன்வைப்பதாகக் கூறுவது கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பதாகும். உண்மையிலிருந்து வெகு தொலைவிலானது அது. இருப்பினும் அரசியல் வழித் தீர்வில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் அதே நேரத்தில் பயங்கரவாதத்தின் விருப்புக்களுக்கு உட்படாது.

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் திட்டமிட்டு துஸ்ப்பிரயோகம் செய்துள்ளனர். தொடர்ந்த வன்முறைகளுக்கு தயார்படுத்த இந்த ஒபந்தத்தை அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

வட அயர்லாந்தை முன்னுதாரணமாகக் கொண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தமானது ஒவ்வொரு கட்டமான ஆயுதக் களைவை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றார் பாலித கோகென்ன.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.