Tuesday, October 23, 2007

யாழில் 8 பேர் சரண்

[செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2007] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 8 பேர் மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்துள்ளனர். தென்மராட்சியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் (கணவன், மனைவி மற்றும் மூன்று மகன்கள் - ஒருவர் மாணவர்), சரசாலை, கொடிகாமம் மற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஆகியோர் நேற்று திங்கட்கிழமை யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்தனர். இதனிடையே யாழ். சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள சரணடைந்தோருக்கான புனர்வாழ்வு மையத்தை எதிர்வரும் நவம்பர் 24 ஆம் நாள் சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.டி.சில்வா திறந்து வைக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.