Wednesday, October 03, 2007
ஈழத் தமிழர்களின் சுயநிர்ண உரிமையை மீட்க வலியுறுத்தி சென்னையில் 6 ஆம் நாள் பேரணி: மரு. கிருட்டிணசாமி
[புதன்கிழமை, 3 ஒக்ரொபர் 2007]
ஈழத் தமிழர்களின் சுய நிர்ண உரிமையை மீட்க வலியுறுத்தி சென்னையில் 6 ஆம் நாள் பேரணி நடத்தப்படும் என்று புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:
30 ஆம் ஆண்டுகளாக நடந்து வரும் ஈழத் தமிழர் விடுதலைப் போர் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போரை அங்கீகரித்து பேசுவதும் பிறகு தமிழர்கள் மீது போர் தொடுப்பதும் என தொடர்ந்து இரட்டை வேடதாரிகளாக பவனி வருகிறார்கள்.
அண்மைக்காலமாக ஈழத்தமிழர் போராட்டத்தில் மிக மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது. தினமும் 10 முதல் 15 தமிழ் இளைஞர்கள் மாண்டு வருகிறார்கள். இதில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் சாதிப்பது முறையல்ல.
ஈழத் தமிழர்களின் சுயநிர்ண உரிமையை மீட்டுத்தர வேண்டும்.
மருந்து மற்றும் உணவு பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்புவதற்கு தடை விதிக்கக்கூடாது
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6 ஆம் நாள் சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக பேரணி நடத்தப்படுகிறது.
மன்றோ சிலையில் தொடங்கி கோட்டை நோக்கி புறப்படும். பேரணியின் முடிவில் முதலமைச்சரிடம் மனு அளிக்கப்படும். எனது தலைமையில் நடக்கும் பேரணியை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைக்கிறார் என்றார் அவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.