உலகில் ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக நசுக்கப்படும் நாடுகளில் சிறீலங்கா 156 வது இடத்தில் உள்ளது. எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு மேற்கொண்ட வரிசைப்படுத்தல் பட்டியலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தமும் மற்றும் சமாதானமும் என்ற கருப்பொருளில் வரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 169 நாடுகளின் வரிசையில் சிறீலங்கா 156 இடத்தைப் பெற்றுள்ளது.
ஊடக சுதந்திரம் மீறப்படும் நாடுகளின் வரிசையில் எரித்தியா, சோமாலியா, சீனா, பர்மா, லாவோஸ், பாகிஸ்தான், ஈரான், ஈராக், கியூபா, வியட்நாம், சிறீலங்கா, வடகொரியா போன்ற பல நாடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தரவரிசையில் இம்முறை 169வது இடத்தில் எரித்திரியா தெரிவாகியுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.