
[சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2007]
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு, அந்த அமைப்புகள் பயங்கவாரதப் பட்டியலில் இணைப்பட்டதற்கான காரணத்தை விளக்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
லக்ஸம்பேர்கில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் 50ற்கும் மேற்பட்ட அமைப்புகளும், குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
முகவரி இல்லாத அமைப்புகளுக்கு கடிதம் அனுப்ப முடியாது என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் அவை பற்றிய விபரங்கள் இணைக்கப்பட இருப்பதாக, பெயர் குறிப்பட விரும்பாத ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியல் 6 மாதங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில், ஈரானின் முஜாஹிதீன் அமைப்பு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு காரணமாக அது புதுப்பிக்கப்படாமல் இருக்கின்றது.
இதனால் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடாது, மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கப்பட முடியால் இருப்பதாகக் கருதப்படுகின்றது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.