அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் செயற்படும் பல்வேறு அமைப்புகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்திற்கு அருகில் செங்கடல் பகுதியில் இந்த பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியங்களுடன் கூடிய இரு கப்பல்கள் இருப்பதாக, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று சவூதி அரேபியாவின் ஜெட்டா (Jeddah) நகருக்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளது
ஆயுத களஞ்சியங்களை கொண்ட இந்த கப்பல்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அத்துடன் இந்த இரண்டு கப்பல்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவன்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய 15 அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை குறித்த நிறுவனம் நைஜீரியாவின் பொக்கோ ஹாராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதங்களை விநியோகித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் மாலைதீவு அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு, அவன்கார்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் நிஷ்சங்க சேனாதிபதியே கடற்படை புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசகராக இருந்தார்.
இதனால், மேற்படி சதித்திட்டத்திற்கு தேவையான ஆயுதங்களை சேனாதிபதி வழங்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவை குறித்து பாதுகாப்பு தரப்பினர் விரிவான விசாரணைகளை நடத்தி வருவதுடன் அதனை சர்வதேச மட்டத்தில் விரிவுப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.