தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்கான தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு நாட்டிலும் பலத்த போட்டி எதிர்பார்க்கப்பட்டுத், தேர்தல் ஆணையம் அதனை எதிர் நோக்கியிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் பங்குபற்ற இருந்தவர்கள் பலர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் தேர்தலில் இருந்து ஒதுங்க எடுத்துக் கொண்ட முடிவு, புலம் பெயர் நாடுகளில் தமிழரின் ஒற்றுமைப் பலம் நிலைநாட்டப் பட்டிருப்பதை வலியுறுத்துவதாக அமைகிறது.
இந்த யதார்த்தத்தின் காரணமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்கான தேர்தல் பெரும்பாலான நாடுகளில் போட்டியில்லாத் தேர்வுகளாக அமைந்திருப்பதைக் காணலாம்.
மக்களால் போட்டியின்றி அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் பட்டியல் வருமாறு:
கனடா
திரு. ஜோசப் பொன்ராஜா அன்ரனி, திரு. ஈழவேந்தன் எம் கே , திரு. ஹென்றி கிருபைராஜா, திரு. மரியராசா மரியாம்பிள்ளை, திரு. நிமல் விநாயகமூர்த்தி ,திரு. ரமணன் குமாரசாமி ,திரு. ரவீந்திரன் தர்மலிங்கம், திருமதி. செல்வஜோதி ரவீந்திரன் , திரு. செல்வராசா ஐயாத்துரை , திருமதி. சாந்தினி சிவராமன் , திரு. ஸ்ரீநாராயணதாஸ் நவரத்தினம் , திரு. ஸ்ரீசங்கர் (சியான்) சின்னராசா , திருமதி. பிரியா அஜெய், திரு. சுரேன் மகேந்திரன் ,திரு. விமலராஜா குலசிங்கம் ,திரு. இராமசந்திரன் துரையப்பா ,திரு. நந்தகுமார் மகாராசா ,திரு. சிவானந்தன் முத்துக்குமாரு, திரு. யோகேந்திரன் வைசிகமாகாபதி ,திரு. தனுசன் இராசையா ,திரு. இரட்ணா முத்துக்குமாரசாமி ,திரு. மார்க்கண்டு மோகனசிங்கம் ,திரு. நவநேசன் முருகண்டி ,திரு. எரிக் சேவியர், திருமதி. கோசலாதேவி சிவானந்தன்
ஐக்கிய இராச்சியம்
திரு. மோகன் தியாகராஜா, திரு. ருத்திராபதி சேகர் ,திரு. அம்பலவாணர் அகிலவாணர் , திரு. தில்லை நடராஜா, திரு. வன்னியசிங்கம் குணசீலன் , திரு. கந்தப்பு ஆறுமுகம் , திரு. மணிவண்ணன் பத்மநாபன் , திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் , திருமதி. வாசுகி முருகதாஸ் , திரு. அருணாசலம் இராஜலிங்கம் , திரு. தாமோதரம்பிள்ளை முருகதாஸ், திரு. அருண் வி. கோபித் , திருமதி. பாலாம்பிகை முருகதாஸ் , செல்வி. கார்த்திகா விக்னேஸ்வரன், செல்வி;. லவண்யா பாலசிங்கம் , திரு. திருக்குமரன் இராசலிங்கம் , திரு. அப்பாத்துரை வைரவமூர்த்தி , திரு. நிமலன் சீவரட்ணம் ,திரு. தேவராஜா நீதிராஜா , திரு. வடிவேலு சுரேந்திரன்
ஐக்கிய அமெரிக்கா
திரு. விக்ரர் சின்னா இராஜலிங்கம் ,திரு. ஜே கனகரட்ணம் ஜெயந்தன் ,திரு. விசுவநாதன் ருத்திரகுமாரன் ,திரு. ரஞ்சன் மனோரஞ்சன் ,திரு. ஜெயக்குமார் ஐயாத்துரை Dr. திருமதி.சர்வேஸ்வரிதேவி தேவராஜா ,திரு. சுரேந்திரா துரைரட்ணம், Dr. தவேந்திரா அம்பலவாணர் ராஜா, திரு. சந்திசேகரம் கந்தையா திரு. சண் சுந்தரம்
அவுஸ்திரேலியா
திரு. கனகசபாபதி சிறிசுதர்சன் ,திரு. குணசிங்கம் தர்சன் ,திரு. கந்தசாமி பாஸ்கரசோதி ,திரு. சுப்;பையா ஸ்கந்தகுமார் , Dr. திருமதி.அபிராமி விசுவநாதன் ,திரு. டொமினிக் சந்தியாபிள்ளை ,திரு. சண்முகம் சபேசன் ,திருமதி. உதயகுமாரி சிங்கராசா ,திரு. கனகேந்திரம் மாணிக்கவாசகா
ஜேர்மனி
திரு. நடராசா பத்மநாதன் ,திரு. சின்னையா றீமன் லோகநாதன் ,திரு. கந்தையா சுப்பிரமணியம், திரு. செபஸ்ரியன் தனிநாயகம ,திரு. சுப்பிரமணியம் பரமானந்தன், திரு. சுப்பையா லோகநாதன் ,திரு. வேலாயுதபிள்ளை ரவீந்திரநாத் ,திரு. அம்பலம் நேமிநாதன் ,திரு. ஹறோல்ட் இரத்தினகுமாரன் ,திரு. செல்வவிநாயகம் மணிமாறன்
அயர்லாந்து
திரு. இளையதம்பி லோகேஸ்வரன்
சுவிற்சலாந்து
திரு. சதாசிவம் ஜெகசீலன் ,திரு. மார்க்கண்டு தேவராஜா ,திரு. செல்வராஜா ஜெயம், திரு. இராஜதுரை செந்தில்குமாரன் ,திரு. புவனேந்திரன் மோகனராஜ் ,திரு. முருகையா சுகிந்தன் ,திருமதி. ரஜினிதேவி செல்லத்துரை ,திரு. கஜந்தன் கனகசுந்தரம் ,திரு. அருளானந்தம் தெய்வேந்திரன்
பிரான்ஸ்
திரு. கலையழகன் கார்த்திகேசு (77), திரு. சுதர்சன் சிவகுருநாதன் (92), திரு. மகிந்தன் சிவசுப்பிரமணியம் (93), திரு. கமலேந்திரா பாலசந்திரன் (94), திரு. சவரிமுத்து கொன்ஸ்ரின் - தெற்கு
குறிப்பு:
1. பிரான்ஸ் நாட்டில் இரு தேர்தல் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. 'தேர்தல் நடைமுறைக் கைநூல்' விதிகளுக்கமைய நிவர்த்தி முனைப்புகள் எடுக்கப்படுகின்றன.
2. வடக்குப் பிரான்ஸ் மாநிலத்தில் கிடைக்கப்பெற்ற வேட்புமனு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப் படுவதால் இத்தொகுதியில் வேட்புமனு மீளக் கோரப்படுகின்றது. இத்தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒக்டோபர் 22 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது. விபரம் தேர்தல் ஆணையத்தின் www.tgte-ec.com இணையத்தளத்தில் தரப்படும்.
டென்மார்க்
திரு. அனிசன் குலசேகரம் ,திரு. சார்ல்ஸ் ஆனந்தம்
நோர்வே
திரு. சயன்ரா சண் ,திரு. தோமஸ் அக்குவைனஸ் அலோசியஸ்
நியூசிலாந்து
திரு. ஆறுமுகம் தேவராசன், திருமதி. ஆன் உமா ஜோஜ்
திரு. ஆறுமுகம் தேவராசன், திருமதி. ஆன் உமா ஜோஜ்
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் செ. ஸ்ரீதாஸ் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு பிறிதொரு அறிக்கையில் மறுதொகுதி மக்கள் பிரதிநிதிகளின் ஒளிப்படங்கள் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.