'காணாமல் போன என்ர மகனைக் கண்டு பிடித்து தாடா' என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தாயொருவர் கூக்குரல் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கிற்கான தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள ஜனாதிபதி நேற்று யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதன்போது யாழ்.துரையப்பா விளையாட்டரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
ஜனாதிபதி உரையாற்றத் தொடங்கியதும் நிகழ்வினை பின்பகுதியில் இருந்து அவனதானித்துக் கொண்டிருந்த தாயொருவர் திடீரென்று காணாமல் போன என்ர மகனைக் கண்டு பிடித்து தா? , என்று கூச்சலிட்டார்.
இதனை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் நான் செத்தாலும் பரவாயில்லை என்னை விடுங்கடா என்று அவர் கத்தினார். ஆனாலும் பின்னர் ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி விட்டனர்.
இந்த சம்பவங்களால் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் ஜனாதிபதியின் உரையினையும் கண்டு கொள்ளாமல் எழுந்திருந்தனர். ஆனால் எந்த சலனமும் இன்றி ஜனாதிபதி தனது உரையினை முடித்துக் கொண்டார்.
குறித்த தாயை, யாழ்ப்பாணத்திற்கு புத்தளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்பு வியாபாரியான அரசாங்க வேட்பாளர் ஒருவரே கஸ்ரப்பட்டு அழைத்து வந்திருந்தார் என்பதோடு அவர் நீல படையின் ரீ-சேட்டும் அணிந்திருந்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.