Monday, August 05, 2013

வெலிவேரிய சம்பவத்தில் இறந்த அகிலவின் இறுதி கிரியையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

ரதுபஸ்வல இரசாயன கழிவு நீர் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதியன்று வெலிவேரிய நகர மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உயிரிழந்த அகிலவின் இறுதிகிரியைகள் நேற்று (ஞாயிறு) இடம்பெற்றது. சுத்தமான குடிநீர் கேட்டு கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதி மாலை 5 மணியளவில் போராட்டம் நடத்திய வெலிவேரிய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 17 வயதுடைய இளைஞன் அகில உட்பட மூன்று பேர் பலியானதுடன் பலர் காயமடைந்தனர். 

நேற்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் அனைவரும் மகிந்த அரசை கடுமையாகச் சாடியிருந்தார்கள். இதேவேளை புதைக்கப்பட்ட அகிலவின் மண் மேல், கைகளை அடித்து சத்தியம் செய்து அவரது தங்கையும், அம்மாவும் அழும் காட்சிகளும் இங்கே புகைப்படமாக இணைக்கப்பட்டுள்ளது. இக் கிராம மக்கள் மகிந்தர் மீதும் கோட்டபாய மீது, கடும் ஆத்திரத்தில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.