பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷூக்கு அஞ்சலி செலுத்தி வந்த எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், முதல்வர் எனக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரையில் இன்று (31ஆம் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலத்தில் பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியதில் இருந்து 5 நாட்களாக 20க்கும் மேற்பட்ட முறை டெலிபோனில் மிரட்டல் எனக்கு வருகிறது.
போனில் பேசுபவர்கள், “மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசி வருகிறாய், உன் பேச்சை இத்துடன் நிறுத்தாவிட்டால் தீர்த்து கட்டிவிடுவோம்” என மிரட்டி வருகிறார்கள். இது தொடர்பாக போலீசில் புகார் செய்ய உள்ளேன்.
கடந்த 1980 முதல் 2011 வரை மதுரை ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.
தற்போது என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே முதல்வர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆதீனம் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.