யாழ்.நகரில் தமிழ், இளைஞர், யுவதிகளின் தவறான செயற்பாடுகளுக்கு யாழ். மாநகர முதல்வரும் ஈ.பி.டி.பி உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யாழ்.நகரில் சட்டவிரோத விடுதிகளை இயங்குவதற்கு அனுமதியளித்துள்ள யோகேஸ்வரி பற்குணராஜா இந்த விடுதிகளை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இல்லாவிடில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
யாழ்.நகரில் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற சில பிரகிருதிகளால் தமிழ் யுவதிகள் சிலர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு யாழ்.காவல்துறையினரும் யாழ்.மாநகர சபையினரும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்த நிலையிலேயே யாழ்.மாநகர முதல்வர் லஞ்சம் பெற்றுக்கொண்டு இயங்குவதற்கு மறைமுக அனுமதி வழங்கிய விடுதிகள் தொடர்பாக மேற்படி நிசாந்தன் கடந்த சில வாரங்களாக தகவல் சேகரித்திருந்தார். இந்த தகவல்களின் அடிப்படையில் இருநூறு வரையான விடுதிகள் இவ்வாறு இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே சிறியதும் பெரியதுமாக உள்ள மேற்படி விடுதிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும. தவறினால் மாநகர முதல்வருக்கெதிராக தான் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இல்லாதது இவர்களுக்கு வாய்ப்பாய் போய் விட்டது. இளைய தலைமுறையினரை வழிநடத்த நாதியற்று தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது யாழில். ஆக்கிரமிப்பாளன் செய்ய நினைத்தவைகளை இன்று எம் இனத்தின் சில கோடாரிக்காம்புகளே தமது சுயநலனிற்காய் செய்யவிழைகிறார்கள். இவர்களுக்கு யார் பாடம் புகட்டுவது?
ReplyDelete