உலக நாடுகளின் பிடியிலிருந்து இலங்கை இனியும் தப்பிக்க முடியாது. இதன்மூலம் சுதந்திர தனிஈழம் விரைவில் நனவாகும் வாய்ப்புள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் தனிசிறப்பு வாய்ந்தது.
பொதுவாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமைவதற்கு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்ச் மாதம் 24-ம் திகதி கோரிக்கை விடுத்தேன். அந்த தீர்மானம் 27-ந் திகதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல பாராளுமன்றத்திலும் இத்தீர்மானம் நிறைவேறும் நாள் விரைவில் வரும். ஆனால் தற்போதைய அரசு அதை செய்யாது. இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
விரைவில் புதிய அரசு அமையும். அப்போது இந்த தீர்மானம் நிறைவேறியே தீரும் என வைகோ தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.