டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளின் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மற்ற உச்ச நீதி மன்றம் அனுமதி மறுத்துள்ளது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட 6 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.இன்னொரு குற்றவாளிக்கு 18 வயது நிரம்பாததால் அவரின் வழக்கு சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் குற்றவாளி முகேஷ் என்பவர் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தன்னை வேறு சிறை அல்லது, தனது வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும் என்று முகேஷ் கொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து முகேஷின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில், தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும், தனது வழக்கை வேறு மாநிலத்துக்கு மற்ற வேண்டும் என்றும் கேட்டு மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
வழக்கை வேறு மாநிலத்துக்கு மற்ற வேண்டும் என்கிற மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேறு சிறைக்கு மாற்றவேண்டும் என்கிற மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.