Friday, February 04, 2011

சுதந்திரம், ஜனநாயகம், நீதியற்ற ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம்: ஸ்ரீலங்காவின் தீவிரமான மனித உரிமை மீறல் செயலானது சுதந்திர தாகத்து க்கும் நீதிக்கும் அடிபணியும்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினாலும் அதன் முகவர்களினாலும் பெப்ருவரி 4ம் திகதி 63வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஸ்ரீலங்கா கொடி ஏற்றப்படவிருக்கின்றது. ஆனால் அத்தீவி லுள்ள அநேகமான மக்கள் அதனைக் கொண்டாடும் நிலையில் இல்லை. ஒரு லட்சம் மக்களின் உயிரைப் பலி எடுத்து லட்சக் கணக்கான மக்களை உள்நாட்டிலும் உலகெங்குமுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் புலம் பெயரச் செய்த காலந் தாழ்த்தப்பட்ட யுத்தமானது 2009 மே 18ம் திகதி அன்று இரத்த வெள்ளத்துடன் முடிவடைந்தது. ஜனநாயகம், சமாதானம் ஆகியவற்றுக்குப் பதி லாக அதிகாரவர்க்கத்தினர் கொடூரமான ஆட்சியை நடாத்தி வருகின்றனர்.

துனீசியா,எகிப்து, ஜெமன், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் எதிர்மாறாக செயற்பட்டு வரும் ஈவிரக்கமற்ற சர்வாதிகாரிகள் அகற்றப்பட்டு வருவதை உலகம் கண்காணித்து வருகின்றது.

ஆயுத முரண்பாடுகளின் பின்னர் ஸ்ரீலங்கா அரசு எதிர்க் கட்சிகள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமது பிரஜைகளின் குடியுரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றுடன் மனித உரிமைகளையும் நசுக்கி வருவதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது. அரசாங்கத்துக்கு எதிரா கக் குரல் எழுப்புNவுhர் அரசாங்க ஆதரவாளர்களினாலும், ஆயுதக் குழுக்களினாலும் கடத்திச் செல்லப்படும் சம்பவங்களும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

பாரிய அளவில் மனித உரிமைகளை மீறிவரும் நாடு ஸ்ரீலங்கா என்பது சர்வதேச நாடுகளில் பதிவாகி வருகின்றது. அத்துடன் நியூ யோக்கிலுள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு கூறியுள்ளதைப் போன்று ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு ஸ்ரீலங்கா என்ற பெய ரையும் பெற்று வருகின்றது. 'யுத்தமும் இல்லை, சமாதானமும் இல்லை. சிறுபான்மையினரது உரிமைகளும், நீதியும் மறுக்கப்பட்டு வரும் ஸ்ரீலுங்கா' 'யுத்தம் முடிவடைந்து இரண்டு வருட காலமாகியும் சிறுபான்மையினர் குறிப்பாக நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தினமும் அடக்கப்பட்டும், அரசியல், அபிவிருத்தி திட்டங்களில் ஓரங்கட்டப் பட்டும் வருவதாக' அறிக் கைகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் ஊடகவியலாளர்களையும், எதிர்க்கட்சியினரையும்,சமூகநல சேவையாளர்களையும் அச்சுறுத்தியும், கொலைப் பயமுறுத்தியும் வருவதாக மனித உரிமை அவதானிப்புக் குழுவின் 2011ம் ஆண்டு உலகுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சுதந்திரமாக இயங்கி வரும் அரசாங்கக் குழுக்களுக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்குவதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரத்தை பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களை சர்வதேச சமூகத்திடம் ஏற்றுக் கொள்ள ஸ்ரீலங்கா அரசு தவறி விட்டது. ஐ.நா.வினால் குற்றச் செயல் பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவுடன் ஒத்துழைக்க தவறிவிட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் அமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் பற்றி விசாரிக்கும் கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக் குழுவும் தகுதியான நடவடிக்கைகளை எடுத்து நீண்ட காலமாக சிறுபா ன்மை இனத்தவர்களுக்கு வேதனையளித்து வரும் விவகாரங்களுக்கு தீர்வு காணத் தவறி விட்டது.

முபாரக் போன்ற ஏனையோர் பலர் அவர்களது பதவியிலிருந்து விரட்டி அடிக்கப்படுவதை நாம் காண்கின்றோம். குறிப்பிடப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து காலால் மிதிக்கும் அதிகாரவர்க்கத்தினரின் திமிரை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதனை ராஜ பக்ஷ அறிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளை யில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் சுதந்திரமற்றவர்களாக முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர். ஸ்ரீலங்காவின் தீவிரமான மனித உரிமை மீறல் செயலானது சுதந்திர தாகத்து க்கும் நீதிக்கும் அடிபணியும் என கனடா தமிழ் பேரவையின் தேசிய பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.