பிரதேசத்தில் எந்த சமூகம் பெரும்பான்மையாக வாழ்கின்றதோ அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேசிய பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை காத்திரமாக முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு அரசாங்கத்த்தின் உறுதியான கொள்கைகள் மிகவும் முக்கியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதேசத்தில் எந்த சமூகம் பெரும்பான்மையாக வாழ்கின்றதோ அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தல் கடமைகளில் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலைமை காணப்பட்டிருந்தால் விருப்பு வாக்கு இலக்கம் வெளியிடுதல் போன்ற பிரச்சினைகள் எழுந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைவரும் இரண்டாம் மொழியை கற்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஏனையவர்கள் மொழியைக் கற்குமாறு கோருவதற்கு முன்னர் நாம் இரண்டு மொழிகளை தெரிந்திருப்பது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.