Wednesday, January 19, 2011

யாழ் . தொடர் கொள்ளைச் சம்பவங்களில் நேற்றைய கொள்ளை தொடர்பான செய்தி!

யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளைகளில் நேற்றும் கலட்டிப்பகுதியிலுள்ள வீடொன்றில் பட்டப்பகலில் 15 பவுண் நகை கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து அனைவரும் சென்ற சமயமே இவ்வாறு கொள்ளையர்கள் வந்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்சென்று வீட்டிலிருந்த 15 பவுண் நகை மற்றும் வங்கி புத்தகம், தன்னியக்க இயந்திர அட்டை, கடனட்டை உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடரும் கொள்ளை மற்றும் கொலை, துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் என்பவற்றால் யாழ்.மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.