Friday, January 14, 2011

ஐ.நா நிபுணர்கள் குழுவின் சேவைக்காலம் மேலும் ஒருமாதம் நீடிப்பு:

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், மூவர் அடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார்.

இந்த நிபுணர்கள் குழுவின் சேவைக்காலத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை அடுத்த மாத இறுதியளவில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறெனினும், என்ன காரணத்திற்காக காலம் நீடிக்கப்பட்டதென்பது அறிவிக்கப்படவில்லை. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மார்சூகீ தாரூஸ்மானின் தலைமையில் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிபுணர்கள் குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நிபுணர்களின் விசாரணைகள் அவசியமற்றவை என இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை தொடர்நடது வெளியிட்டுவருகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.