குடாநாட்டில் தொடரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களை நிறுத்த விசேடஏற்பாடுகள் உடன் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று உறுதியளித்துள்ளார் பொலிஸ்மாஅதிபர்.
இதற்காக பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என்றும் கலாநிதி மஹிந்தபாலசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகைதந்த பொலிஸ்மா அதிபர் பொதுமக்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும் என்றார் அவர்.உட்பட உயர் அதிகாரிகள் பங்குபற்றினர்.
பொது மக்களின் சார்பாக யாழ்.வர்த்தக சங்கப் பிரமுகர்கள், சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவின் பிரதிநிதிகள், யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும்சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலர்கள், தனியார் பஸ் உரிமையாளர் சங்கப்பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த ஒரு வருடத்துக்கு மேலான காலமாக மக்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். எனினும் கடந்த ஒரு மாதமாகத் தொடரும் கொலைகள், கொள்ளைகள், ஆள்கடத்தல்கள் போன்றவற்றால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இத்தகைய சம்பவங்கள் தொடராமல் இருக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பேணப்படுவதை பொலிஸார் உறுதிப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் பிரதிநிதிகள் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தினர்.
இதற்குப் பதில் அளித்து உரையாற்றிய பொலிஸ்மா அதிபர் தெரிவித்தவை வருமாறு:
யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் இல்லை.அதேவேளை நாட்டின் ஏனைய மாகாணங்களில் இடம்பெறும் வன்செயல்களுடன் ஒப்பிடும்போது, இங்கு குறைந்த எண்ணிக்கையான குற்றச்செயல்களே இடம்பெறுகின்றன.ஏற்கனவே இடம்பெற்ற சம்பவங்களுடன் தீவிராவதச் செயற்பாடுகளுக்குத் தொடர்புகள்இருப்பதாகவும் கண்டறியப்படவில்லை.பெரும்பாலான சம்பவங்கள் சொந்தக் காரணங்களுக்காகவே இடம்பெற்றுள்ளன என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நடந்த சம்பவங்களை ஊடகங்களை மிகைப்படுத்தியுள்ளன என்றே கருதுகின்றேன்.எனினும் எதிர்காலத்தில் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவதைத்தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸ் ரோந்து சேவையை விஸ்தரிக்க இருக்கின்றோம்.பொலிஸ் ரோந்தை தீவிரப்படுத்த கூடுதல் ரோந்து வாகனங்களும் யாழ்ப் பாணத்துக்கு அனுப்பப்படும் என்றார் பொலிஸ்மாஅதிபர்.தெற்கிலிருந்து தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதை நிறுத்த உடன் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ்மா அதிபர் உறுதியளித்தார்.யாழ். மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது."தற்போது 300இற்கு மேற்பட்ட தமிழ் பொலிஸார் நியமிக்கப்பட்டுள் ளனர். 2,500 தமிழ் பொலிஸாரை வடக்குக் கிழக்கில் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றும் பொலிஸ்மாஅதிபர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.