ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிப்பதற்காக போலி வீசா மற்றும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்திய ஐந்து தமிழ் இளைஞர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி வீசா மற்றும் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு விமான நிலைய நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதவண்ணம் உடந்தையாக செயற்பட்ட விமான நிலைய அதிகாரியொருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஐந்து வாலிபர்களில் ஒருவர் இத்தாலிக்கும் மற்றொருவர் லண்டனுக்கும், மற்றைய மூவரும் பெல்ஜியத்துக்கும் பயணிக்க முற்பட்ட போதே விமான நிலையப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசத்தைச் சோ்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் பெருந்தொகையான பணத்தை போலி முகவர்களிடம் கொடுத்து ஏமாந்திருப்பது விசாரணைகளின் மூலம் வெளிவந்துள்ளது.
அவர்களில் இத்தாலி மற்றும் இலண்டனுக்கு பயணம் செய்ய முயன்ற இருவருக்கும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மூவரும் பதினான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.