Wednesday, January 19, 2011

யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய துணை தூதரகத்தில் தலை விரித்தாடும் லஞ்சம்! பொதுமக்கள் புகார்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய துணைத் தூதரகத்தின் விஸா வழங்கும் நடவடிக்கைகளில் கப்பம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தூதரகத்திற்கு சென்று திரும்பும் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மிக கச்சிதமான முறையில் லஞ்சம் கொடுத்து சிலர் தங்களுக்கு வேண்டிய இந்தியாவிற்கான விஸாவினை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அத்தோடு பாதுகாப்பு பிரிவினரின் செல்வாக்கைப் பயன்படுத்தியும் இந்திய துணைத் தூதரகத்தில் இருந்து விஸா அனுமதியினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளும் அங்கு இடம்பெற்று வருவதாக விஸா அனுமதி பெறச் செல்லும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.