அநுராதபுரம் சிறைச்சாலையில் மீண்டும் அமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாகச் சற்று நேரத்துக்கு முன்னர் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இந்தச் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் காரணமாகச் சிறைச்சாலை அதிகாரிகளினால் ஒரு கைதி சுட்டுக் கொல்லப்பட்டமை தெரிந்ததே.
இந்தக் கைதியின் கொலைக்குக் காரணமாகவிருந்த சிறைச்சாலை அதிகாரியைக் கைது செய்யுமாறு கோரியே ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளைக் கொடி தாங்கிய சிறைக் கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக் கூரையில் ஏறி நின்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர் என எமது இணையத் தளத்துக்குச் செய்திகள் கிடைத்துள்ளன.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.