ஸ்ரீலங்கா அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குமாறு சர்வதேச நாடுகளுக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து கனடா 6000 குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசு உடனடியாக உதவவேண்டி உள்ள நிலையில், இலங்கையில் உள்ள இலங்கைக்கான கனேடிய பொருளாதார அபிவிருத்தி உதவி நிலையம் சிறப்பாக செயற்படக்கூடிய தருணம் இது என்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசும் மற்றும் ஏனைய முகவர்கள் கேட்டுக்கொண்டவை தொடர்பிலும் அதிக கவனம் கெள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கையில் உள்ள கனேடிய பொருளாதார அபிவிருத்தி உதவி நிலையம், அவசர அடிப்படைத் தேவைகளையும் மற்றும் தங்குமிட வசதிகளையும் சுமார் 6000 குடும்பத்திற்கு வழங்ககவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாங்கள் இவ்வாறு உதவி வழங்குவது மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமன்றி, எதிர்காலத்தில் இக்கட்டான நிலைகளில் அவர்களும் மற்றவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்பதற்காகவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.