Sunday, January 30, 2011

தமிழ்நாட்டில் 1 லட்சம் முத்துகுமார் உருவாக வேண்டும்: நடிகர் சத்யராஜ் பேச்சு

உலக மனிதாபிமான கழகம் சார்பில் மறைந்த முத்துகுமாரின் படத்திறப்பு நிகழ்ச்சி அண்ணாமலை ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் வக்கீல்கள் முருகேசன், சிவக்குமார் ஆகியோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு முத்துகுமாரின் படத்தை திறந்து வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

ஒருவர் இறந்துவிட்டால் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது என்று சொல்வது வழக்கம். ஆனால் முத்துகுமாரின் இழப்பை ஈடு செய்ய கூடியதுதான். அவரது தியாகத்தை போற்றும் வகையில் தமிழகத்தில் 1 லட்சம் முத்துகுமார் உருவாக வேண்டும்.

அவ்வாறு உருவானால் அவரது இழப்பு ஈடு செய்ய கூடிய இழப்பாக இருக்கும். கடந்த ஆண்டு முத்துகுமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினேன்.

இந்த ஆண்டு சூட்டிங் இருந்ததால் இங்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். தமிழன் எங்கு இருந்தாலும் அஞ்சலி செலுத்துவதை கடமையாக வைத்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.