இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவின் அழைப்பையேற்று அவருடனான சந்திப்பில் இன்று திங்கட்கிழமை கலந்து கொள்கின்றோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்:-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் விரும்புகின்றார்.
அதனடிப்படையில் இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பையேற்று நாம் கலந்துகொள்ளவுள்ளோம். பெரும்பாலும் அனைத்து எம்.பி.க்களும் கலந்துகொள்வர்.
எனினும் அவருடனான சந்திப்பின்போது என்னென்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று தற்போது கூற முடியாது. சந்திப்பின் பின்னர் அது குறித்து தகவல் வெளியிட முடியும் என்றார் சம்பந்தன் அவர்கள்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.