எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் தவறாது வாக்களித்து தமது தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென லண்டன் வடமேற்கு பிராந்தியத்தில் 403 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழின உணர்வாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தியானந்தமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டம் நீண்ட வரலாற்றைகக் கொண்டது. பல பரிணாமங்களைக் கண்டுள்ளது. இன்று தாயகத்தில் எமது போராட்டம் பல சர்வதேச சக்திகளின் சதித்திட்டத்தினால் மௌனிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எமது இலட்சியத்தை அடையும் வரை இப்போராட்டம் தொடரும். எனினும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப அதன் வழிமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழீழம் என்ற இலட்சியம் என்றுமே மாறப்போவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் தாயகத்தில் வாழும் எமது மக்கள் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிகமோசமான மனிதப்படுகொலையில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை. ;தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் வீதிகளில் விடப்பட்டுள்ளனர். இன்னமும் கொலை, கடத்தல், பாலியல்வல்லுறவு, சித்திரவதை என்பன தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் அம்மக்கள் தமது உரிமைகளுக்காகவோ, விடுதலைக்காகவோ குரல் கொடுக்க முடியாதவாறு நசுக்கப்பட்டுள்ளனர்.
எனவே எமது தாயக மக்களுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுக்கக் கூடிய செயல்திறன் மிக்கவர்களாக எமது புலம்பெயர் உறவுகளே உள்ளனர். எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைய எமது போராட்டம் இன்று புலம்பெயர் மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு இராஐதந்திர நகர்வாக சர்வதேச மட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அவை உருவாக்கப்பட்டு அதன் ஊடாக தாயக விடுதலைலையை விரைவு படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நாடுகடந்த அரசாங்கம் தொடர்பாகவும் அதன் தேர்தல் தொடர்பாகவும் சர்வதேச சமுகம் இன்று மிக உன்னி;ப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது.
நாம் வீழ்ந்துவிட்டோம் என சிறிலங்கா அரசும் இந்தியா உள்ளிட்ட சர்வதேசமும் நினைத்திருக்கும் வேளையில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் ஓராண்டு நிறைவு பெறும் மே மாதத்தில் புலம் பெயர் மக்கள் மீண்டும் நிமிர்ந்தெழும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்தேர்தலில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் எமது ஒற்றுமையையும் பலத்தையும் நாம் சர்வதேசத்திற்குக் காட்ட முடியம். அத்துடன் இத்தேர்தலில் கொள்கையுடன் உறுதியாக நின்று தேசியத்திற்காக தொடர்ந்து உழைக்கக் கூடியவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறானால்தான் எதிர்காலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசை சிறப்பாகக் நடத்தி அதன் இலக்கை அடையமுடியும்.
எனவே எமது மக்கள் இத்தேர்தலை ஒரு தேசியக் கடமையாகக் கருதி நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை (02.05.2010) வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிப்பதன் மூலம் ளுஎமது இனத்தின் ஒற்றுமையையும் பலத்தையும் மீண்டும் நிருபித்துக் காட்ட வேண்டும்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.