Monday, May 03, 2010

பாகிஸ்தானில் 21 தலிபான் தீவிரவாதிகள் கொலை : மறைவிடங்கள் அழிப்பு _

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் நடத்தப்பட்ட இரு வேறு குண்டுத் தாக்குதல்களில் 21 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 29 பேர் காயமடைந்தனர். 8 பேர் கைது செய்யப்பட்டனர்.13 மறைவிடங்கள் அழிக்கப்பட்டன.

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இராணுவத்தினர் குண்டு வீசி அழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓரக்ஷாய் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு விமானப்படையினர் ஹெலிகொப்டர்களில் தாழ்வாகப் பறந்து குண்டு வீச்சு நடத்தினர்.

ஓரக்ஷாயில் நடத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் 8 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர். மேலும் தீவிரவாதிகளின் 3 மறைவிடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டன.

கடேகாய் பகுதியில் இல்ஜு குண்டாகி ஆகிய இடங்களில் நடந்த தாக்குதலில் 13 தலிபான்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். 4 முகாம்கள் அழிக்கப்பட்டன.

ஓரக்ஷாய் அருகே உள்ள தபோரியில் நடந்த குண்டு வீச்சில் தலிபான்களின் 6 மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை அந்நாட்டு அரசு அதிகாரி சமியுல்லாகான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.