Saturday, May 01, 2010

'வலி சுமந்த மாதம்' பிரகடனம், தமிழ் இளையோர் அமைப்பு கனடா: மே 1ல் இருந்து 19 வரையான இவ் நிகழ்வுகளில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக பங்குபெற்றுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.

தமிழீழ வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத துன்பங்கள் தமிழர் மீது திணிக்கப்பட்ட துயரங்கள் நிறைந்த மாதம் மே மாதமாகும். இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு (2009) மே மாதம் அன்று, கிளிநொச்சியில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ மக்கள் மீது வரலாறு காணாத கொடிய இனப் படுகொலையை வெறிகொண்ட....... இலங்கை அரசு திரைமறைவில் கட்டவிழ்த்திருந்தது.

 சர்வதேசம் பாரமுகம் காட்ட, இனவெறி கொண்ட சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை வகை தொகையின்றி கொன்று குவித்திருந்தது. 50.000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வைகை தொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடிய வதைமுகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டனர்.

இற்றைக்கு நூறாயிரத்திற்க்கும் மேற்பட்ட இடம்பெயந்த மக்கள் திறந்தவெளிச் சிறைகளில் மறுவாழ்வு என்ற போர்வையில் அவரது வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைவாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

மறுவாழ்வு என்ற போர்வையில் விடுவிக்கப்பட்ட ஏறத்தாழ 150,000க்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்தக் கிராமங்களுக்கு போகமுடியாது உணவு, குடிநீர், உரிய வதிவிடங்கள் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாது குடிசிங்களப் படையினரால் ஆங்காங்கே குடிவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வதைமுகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களது வதிவிடங்களை ஆக்கிரமித்திருக்கும் இலங்கைப் படையினர், அவற்றில் புதிய படைமுகாம்களை அமைத்து பாரிய பிரதேசங்களை பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி வருகின்றனர்.

எமது மாவீரகளின் துயிலும் இல்லங்களையும் நினைவுச் சின்னங்களை மற்றும் தமிழர் வரலாற்று பண்டைய அடையாளங்களை அழித்தும் மனித குலமே ஏற்றுகொள்ள முடியாத செய்யலகளை சிங்கள அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்படுத்தி வருகின்றது

கனடா தமிழ் இளையோர் அமைப்பு, கனடா தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து இக் கொடிய படுகொலைகளை நினைவு கூரும் முகமாகவும், இப்படுகொலைகளை உலகுக்கு வெளிக்காட்டுமுகமாகவும் மே மாதத்தை 'வலி சுமந்த மாதம்' ஆக பிரகடனப்படுத்தி நினைவெழுச்சி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.

இதன்படி கனடா நாட்டில் மக்களை ஒன்று திரட்டி பாரிய போராட்டங்களை கடந்த ஆண்டு நடாத்திய கனடா தமிழ் இளையோர் அமைப்பு மே 1ல் இருந்து 19 வரையான இவ் நிகழ்வுகளில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக பங்குபெற்றுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.

அத்தோடில்லாது, இக்காலகட்டத்தில் இறந்த எம்மக்களது நினைவெழுச்சி நிகழ்வுகள் அல்லாத களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்வோம் என எம்மக்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

தமிழ் இளையோர் அமைப்பு - கனடா

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.