Sunday, April 18, 2010

தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்படமாட்டாது – இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

வடக்கிற்கு தனியான சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் மேற்குலக நாடுகளுக்கு அறிவித்துள்ளதென திவயின ஞாயிறு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் வடக்கு மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அறிவித்துள்ளது.

சுயாட்சி அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அதிகாரங்கள் ஒருபோதும் வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ இராச்சியமொன்றை அமைக்கும் முயற்சியில் புலி ஆதரவாளர்கள் முனைப்பு காட்டி வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்ப்பபதாகவும், எட்டு நாடுகளில் இவ்வாறான நாடு கடந்த தமிழீழ இராச்சியம் அமைப்பது தொடர்பிலான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாக்கெடுப்பு முடிவுகளை மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கு காட்டி அதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்த சில சக்திகள் முயற்சிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், இந்த முயற்சிகள் முற்று முழுதாக முறியடிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது என்று அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.