Sunday, April 18, 2010

கும்புறுபிட்டி வாக்கு எண்ணும் பணி மாவட்ட செயலகத்திற்கு மாற்றம் : புலிகளின் அச்சுறுத்தல் காரணமாம்!

திருகோணமலை கும்புறுபிட்டியில் நாளை மாறுநாள் நடைபெறவுள்ள மீள்வாக்குப் பதிவின் பின்னரான வாக்கு எண்ணும் பணிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
பொலிசாரின் ஆலோசனைக்கு அமையவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கும்புறுபிட்டி வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் பணியினையும் மேற்கொள்வதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் புலிகளின் அச்சுறுத்தல் இந்தப் பிரதேசத்தில் இருக்கலாமெனன்ற காரணத்தால் பொலிசாரின் ஆலோசனைக்கு அமையவே வாக்குகள் எண்ணும் பணியை திருமலை மாவட்ட செயலகத்திற்கு மாற்றுவதென முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி கும்புறுபிட்டி வாக்களிப்புச் சாவடியில் வாக்களிப்பு மட்டும் இடம்பெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் திருகோணமலை மாவட்ட செயலகத்திலிருந்தே அறிவிக்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.