தமிழர் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் அரசியல் கட்சிகளை முற்றாகத் தடைசெய்ய சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இதற்கான சட்ட ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு வருவதுடன், தமிழர் தாயகக் கோட்பாடடின் அடிப்படையில் செயற்படும் இரண்டு கட்சிகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும் சிங்கள் ஊடகமான திவயின குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ள சட்டத்தின் பிரகாரம், எந்த கட்சியும் நாட்டை பிளவுப்படுத்த முயற்சித்தால் அக்கட்சியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் எனவும் இப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்பில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், ஜாதீக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரரும் இத்தகைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பூர்வீக தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாதொழித்து, தமிழ் பேசும் மக்களின் நியாயப்பூர்வமான உரிமைகளை மறுப்பதற்கான முனைப்புகளையே சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சி செய்த சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.