அமைச்சரவை நியமிக்கப்படும் போது, அமைச்சுக்களுக்குரிய சுமார் 50 வீதமான துறைகளும், சுமார் 60 வீதமான அரச நிறுவனங்களும் ராஜபக்ஸவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்து அதிகாரபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒதுக்கப்பட்ட துறைகள் மற்றும் அரச நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து பார்த்தால் மக்கள் அதனை நன்கு உணர்ந்துகொள்ள முடியும்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்ற பெயரில் பசில் ராஜபக்ஸ பெரும் எண்ணிக்கையிலான துறைகளை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார். அத்துடன் அரசியல் அமைப்பில்; தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிகமாக நிதி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்களை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்துகொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.