அரசியல் மேடைகளில் உரையாற்றுவது தொடர்பில் எவரும் தமக்கு தடை விதிக்கவில்லை எனவும், எவராலும் எனக்கு தடை விதிக்கவும் முடியாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த விதம் தொடர்பாக நாட்டு மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் குறை எதனையும் தாம் காணவில்லை எனவும், யாரும் எதனையும் சொல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நான் கூட்டங்களில் உரையாற்றுவது சிலருக்கு பெரும் தலையிடியாக அமையக் கூடும் எனினும், எவராலும் எனக்கு தடை விதிக்க முடியாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.